சென்னை:தமிழ்நாட்டின் வடகிழக்குப் பருவமழை தொடங்கி கடந்த மூன்று நாள்களாக கன மற்றும் மிதமான மழைப்பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இரண்டு நாள்களாக மிக கனமழை பெய்துவருகிறது.
இதனால் சென்னை மற்றும் புறநகரப்பகுதியில் பல்வேறு சாலைகள் மற்றும் தாழ்வானப்பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தது. இந்தநிலையில் ஆலந்தூர் சுற்றுவட்டாரப்பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக, பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது.
ஆதம்பாக்கம் காவல் நிலையம் சாலையின் உயரத்தைவிட 3 அடி பள்ளமாக உள்ளது. இதன் காரணமாக கன மழையின்போது மழை நீரானது காவல் நிலையத்திற்குள் புகுந்துள்ளது. இதனால், தொடர்ந்து காவல் நிலையம் செயல்படாத நிலை ஏற்பட்டுள்ளது.
காவல் நிலையத்திற்குள் புகுந்த மழைநீர் மழை நீர் புகுந்த காரணத்தினால் காவல் நிலையம் தற்காலிகமாக அம்பேத்கர் நகர், 20ஆவது தெருவிற்கு மாற்றப்பட்டுள்ளதாக ஆதம்பாக்கம் காவல் துறையினர் தெரிவித்து, காவல் நிலைய வாயிலில் பேனர் வைத்துள்ளனர்.
இதையும் படிங்க:ஆறுகளில் பெருக்கெடுத்த வெள்ளம்...ஆபத்தான முறையில் ஆற்றை கடந்து செல்லும் மக்கள்