தீபாவளி பண்டிகையின்போது மக்கள் புத்தாடைகள், ஆபரணங்கள், அலங்காரப் பொருள்கள் உள்ளிட்டவற்றை வாங்குவது வழக்கம். அந்தவகையில், சென்னை தி.நகரில் உள்ள ரங்கநாதன் தெருவில் பலரும் தங்களது குடும்பத்துடன் வந்து பண்டிகைக்கு தேவையான பொருள்களை வாங்கிச் சென்றுவருகின்றனர்.
இதனால் தி.நகரில் வழக்கத்தை விட அதிக அளவு போக்குவரத்து நெரிசலும் பொருள்கள் திருடுபோவதற்கான வாய்ப்பும் அதிகளவில் உள்ளது. எனவே கூட்ட நெரிசலில் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் தடுக்க ஏராளமான காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.