தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சூர்யா படப்பிடிப்புக்கு கொண்டு சென்ற துப்பாக்கிகள் பறிமுதல்: போலீசார் விசாரணை

உரிமம் இல்லாமல் சினிமா படப்பிடிப்புகளுக்கு வாடகைக்கு விடப்பட்டு வந்த 150 துப்பாக்கிகளை காவல்து றையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

Gun
Gun

By

Published : Aug 20, 2021, 4:58 PM IST

சென்னை கோயம்பேடு பகுதியில் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு சூர்யாவின் "எதற்கும் துணிந்தவன்" சினிமா படப்பிடிப்புக்காக கொண்டு செல்லப்பட்ட இரண்டு ஏ.கே 47 ரக டம்மித் துப்பாக்கிகள் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த டம்மி துப்பாக்கிகளுக்கு உண்டான ஆவணங்கள் இல்லாததால் துப்பாக்கி வாங்கிய இடம் குறித்து விசாரணை செய்தனர். விசாரணையில், சென்னை மாம்பலம் வைத்தியராமன் தெருவில் உள்ள ஒரு வீட்டில் இந்த துப்பாக்கிகள் வாடகைக்குப் பெற்றது தெரியவந்தது.

அதன் அடிப்படையில் மாம்பலம் காவல் துறையினர் அந்த வீட்டை சோதனை மேற்கொண்டபோது சினிமா படப்பிடிப்புக்கு பயன்படுத்தக்கூடிய வெவ்வேறு ரக 150 டம்மித் துப்பாக்கிகள், சண்டை காட்சிகளுக்கு பயன்படுத்தக்கூடிய வெடிமருந்துகள் இருப்பதைக் கண்டுபிடித்தனர்.

பின்னர் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், வீட்டின் உரிமையாளரான செல்வராஜ் கடந்த சில ஆண்டுகளாக கே.எஸ்.ஆர் சினி ஆக்‌ஷன் & ஸ்பெஷல் எஃபக்ட்ஸ் என்ற பெயரில் அங்கு நிறுவனம் நடத்தி வருவதும், அதன் மூலம் சினிமா படங்களின் பயன்பாட்டுக்கு டம்மி துப்பாக்கிகளை வாடகைக்கு விட்டு வருவதும் தெரிய வந்தது.

துப்பாக்கி வைத்திருக்கும் உரிமம் ரத்து

மேலும், செல்வராஜ் டம்மி துப்பாக்கிகளை வாடகைக்கு விட்டுவரும் தொழில் செய்து வந்தாலும் அவர் அதற்கான முறையான உரிமத்தை பெறவில்லை என்பதும் பதிவு செய்த உரிமமும் முறையாக அவர் ஆவணங்களை (Replica Arms Rights) சமர்ப்பிக்காததால் ரத்து செய்யப்பட்டதாகவும் விசாரணையில் தெரியவந்தது.

இதனையடுத்து 150 டம்மி துப்பாக்கிகளையும் பறிமுதல் செய்த காவல்துறையினர் நிறுவன உரிமையாளரான செல்வராஜுக்கு விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்ப முடிவு செய்துள்ளனர். மேலும், முறையான உரிமம் இல்லாமல் டம்மி துப்பாக்கிகளை வைத்து தொழில் செய்த செல்வராஜ் மீது 25 1B ஆயுத தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details