தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாவட்டம் தாண்டிச் சென்று மதுபானம் வாங்கிய 9 பேர் கைது

சென்னை: அரசின் விதிமுறைகளை மீறி மாவட்டம் தாண்டிச் சென்று மதுபானங்கள் வாங்கி எடுத்து வந்த ஒன்பது பேரைக் காவல் துறையினர் கைது செய்தனர்.

மாவட்டம் தாண்டி சென்று மது பாட்டில்கள் கொள்முதல் செய்தவர்கள் கைது
மாவட்டம் தாண்டி சென்று மது பாட்டில்கள் கொள்முதல் செய்தவர்கள் கைது

By

Published : May 8, 2020, 9:09 AM IST

கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுக்குள் கொண்டுவர நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 25ஆம் தேதி தொடங்கி, நாடு முழுவதும் செயல்பட்டு வந்த வணிக நிறுவனங்கள், தொழிற்கூடங்கள், விவசாயம், போக்குவரத்து உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் என அனைத்தும் இயக்கப்படாமல் இருந்து வந்தன. ஆனால் இந்த மாதம் 4ஆம் தேதி முதல் மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கில் சில தளர்வுகள் செய்து விதிமுறைகளை அறிவித்தன.

இதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு முழுவதும் மூடப்பட்டிருந்த மதுக்கடைகள், நேற்று சில விதிமுறைகளுடன் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் திறக்கப்பட்டன. ஆனால், சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கரோனா தொற்றுப் பரவலால், சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மதுபானக் கடைகள் திறக்கப்படவில்லை.

தொடர்ந்து மதுபானம் அருந்துபவர்கள், தங்கள் மாவட்டங்களில் மதுபானக் கடைகள் திறக்கப்படாத பட்சத்தில், மற்ற மாவட்டங்களுக்கு சென்று மதுபானங்கள் வாங்கவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. குறிப்பிட்ட மாவட்டத்திலிருந்து மதுபானம் விற்கப்பட்டு வரும் மாவட்டத்திற்கு சென்று மதுபானங்களை வாங்கினால் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தமிழ்நாடு காவல்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.

இதையடுத்து பூந்தமல்லி - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை, திருமழிசை கூட்டு சாலையில், நசரத்பேட்டை காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தபோது, தனித்தனியே ஒன்பது மோட்டார் சைக்கிள்களில் வந்த நபர்களை மடக்கி சோதனை மேற்கொண்டனர். இதில் விதிமுறைகளை மீறி ஒன்பது பேரும் மது பாட்டில்களை வாங்கி வந்தது தெரியவந்தது.

தொடர்ந்து, அவர்களிடமிருந்து 65 மது பாட்டில்களையும் ஒன்பது மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்த காவல் துறையினர், ஒன்பது பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க :திருமழிசை மார்க்கெட் 9ஆம் தேதி முதல் திறப்பு: ஆட்சியர் தகவல்

ABOUT THE AUTHOR

...view details