தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தனியார் மருத்துவமனை வாசலில் ரியல் எஸ்டேட் அதிபருக்கு அரிவாள் வெட்டு - Tambaram Police Investigate

தாம்பரம் அருகே பிரபல தனியார் மருத்துவமனை வாசலில் 2 பேர் ரியல் எஸ்டேட் அதிபரை அரிவாளால் தாக்கிவிட்டு தப்பினர்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Oct 30, 2022, 9:27 AM IST

செங்கல்பட்டு: தாம்பரம் அடுத்த அகரம் தென் ஊராட்சி பதுவஞ்சேரியைச் சேர்ந்தவர் முருகன். இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்துவருகிறார். இவர் சேலையூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தனது உறவினரைக் காண நேற்று (அக்.29) சென்றார். அப்போது மருத்துவமனை வாசலில் நடந்து சென்றுகொண்டிருக்கும் போது, அங்கு மறைந்திருந்த 2 பேர் அரிவாளால் திடீரென முருகனை சரமாரியாக தாக்கினர். அதன்பின் அங்கிருந்து தப்பினர்.

அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு அதே மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்ந்தனர். இச்சம்பவம் குறித்து அறிந்த சேலையூர் போலீசார், மருத்துவமனையில் உள்ள சிசிடிவி காட்சிகளை சேகரித்து மர்ம நபர்களை வலைவீசித் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பட்ட பகலில் நடந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:வீடியோ: சொத்து தகராறு - நடுரோட்டில் துப்பாக்கியால் சுட்ட நபர்..

ABOUT THE AUTHOR

...view details