தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பார் உரிமையாளரைத் தாக்கிய திமுக வார்டு உறுப்பினர் உள்ளிட்ட 6 பேருக்கு போலீசார் வலைவீச்சு! - திமுக பிரமுகர்

Tasmac Bar Owner Attack: சென்னை கோவிலம்பாக்கம் பார் உரிமையாளரைத் தாக்கிய திமுக வார்டு உறுப்பினர் உள்ளிட்ட 6 நபர்களை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

சென்னை
சென்னை

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 11, 2023, 9:52 PM IST

பார் உரிமையாளரை தாக்கிய திமுக வார்டு உறுப்பினர் உள்ளிட்ட 6 நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு!

சென்னை: சென்னை கோவிலம்பாக்கத்தில் தனியார் மதுபான கடை ஒன்று உள்ளது. இந்த பாரை தினகரன் என்பவர் நடத்தி வருகிறார். இந்நிலையில், இவர் வழக்கம் போல் கடந்த 9ஆம் தேதி பாரில் இருந்த போது, திடீரென வந்த மர்ம நபர்கள், ராஜா என்பவர் குறித்து இவரிடம் விசாரித்துள்ளார். அதற்குச் சரியாகப் பதிலளிக்கவில்லை என அந்த மர்ம நபர்கள் அவரை சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.

இதனால் பார் உரிமையாளர் தினகரனுக்குப் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், தினகரனுக்குச் சிறுநீரகம் பாதிப்படைந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது சம்பவம் தொடர்பாக பள்ளிகரணை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில், பார் உரிமையாளர் தினகரனை நன்மங்கலம் 4வது வார்டு உறுப்பினர் பிரபா(எ)குரு உள்ளிட்ட 6 பேர் தாக்கியது தெரியவந்துள்ளது.

மேலும், இது குறித்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகிய வீடியோ காட்சிகளை காவல்துறையினர் கைப்பற்றி, தலைமறைவாக உள்ள திமுக வார்டு உறுப்பினர் உள்ளிட்ட 6 நபர்களை தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க:குழந்தையின் உடலை அட்டைப்பெட்டிக்குள் வைத்துக் கொடுத்த விவகாரம்: பணியாளர் சஸ்பெண்ட்..!

ABOUT THE AUTHOR

...view details