தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெண்ணிடம் கவரிங் நகையை விற்ற வடமாநில கும்பலுக்கு வலைவீச்சு - chennai latest news

பெண்ணிடம் கவரிங் குண்டு மணி மாலையை, தங்க நகை என விற்பனை செய்து ரூ.2 லட்சம் பணம், 1 சவரன் தங்கச் சங்கிலியை ஏமாற்றிப் பறித்துச் சென்ற கும்பலை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

பெண்ணிடம் கவரிங் நகையை விற்ற வடமாநில கும்பலுக்கு வலைவீச்சு
பெண்ணிடம் கவரிங் நகையை விற்ற வடமாநில கும்பலுக்கு வலைவீச்சு

By

Published : Aug 15, 2021, 7:31 PM IST

சென்னை:அயனாவரம் பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமி (35). இவர் வீட்டில் தனியாக இருந்தபோது, வடமாநில கும்பல் ஒன்று லட்சுமியின் வீட்டிற்கு வந்துள்ளது.

அப்போது தங்களிடம் ரூ. 50 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள், குண்டுமணி இருப்பதாகவும், அதனை ரூ. 4 லட்சம் கொடுத்து வாங்கிக் கொள்ளுமாறும் லட்சுமியின் ஆசையை, வடமாநில கும்பல் தூண்டியுள்ளது.

பணம், நகையை பறிகொடுத்த பெண்

குறைந்த விலைக்கு தங்கநகைகள் கிடைப்பதை எண்ணி மகிழ்ச்சியடைந்த லட்சுமி, ரூ. 2 லட்சம், ஒரு சவரன் தங்க சங்கிலியைக் கொடுத்து, வடமாநில கும்பல் கொடுத்த நகைகள், குண்டுமணியை வாங்கியுள்ளார்.

இதனையடுத்து அந்த வடமாநில கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது. பின்னர் லட்சுமி, தான் வாங்கிய நகை, குண்டுமணிகளை நகைக்கடையில் கொடுத்து பரிசோதித்துள்ளார். பரிசோதனையில் அவை கவரிங் நகைகள் என தெரியவந்தது.

அதன் பின்னரே தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த லட்சுமி, காவல் நிலையத்தில் புகாரளித்தார். இது குறித்து அயனாவரம் காவல்துறையினர், வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க:நண்பனை கொடூரமாக தாக்கிய இருவர் கைது

ABOUT THE AUTHOR

...view details