தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மீசையால் சிக்கிய தி.நகர் நகைக்கடை கொள்ளையன் - போலீஸ் விசாரணையின் முழு விவரம்! - Uttam Business Jewelry

சென்னை: தி.நகர் நகைக்கடை கொள்ளையில் சிசிடிவியில் கொள்ளையனின் முகம் முழுவதும் பதிவாகாத நிலையில், மீசையை வைத்தே கொள்ளையனை கைது செய்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

tnagartheft
tnagartheft

By

Published : Nov 2, 2020, 10:23 PM IST

தியாகராய நகர் மூசா தெருவில் உள்ளது உத்தம் மொத்த வியாபார நகைக்கடை. இக்கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கடந்த 20ஆம் தேதி இரண்டரை கோடி ரூபாய் மதிப்பிலான ஏராளமான தங்க, வைர, வெள்ளி நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இதையடுத்து போலீஸ் தரப்பில் ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு, குற்றவாளிகளைத் தீவிரமாகத் தேடிவந்தனர்.

சிசிடிவி காட்சிகள் ஆய்வு, பலகட்ட விசாரணையின் முடிவில், கோடம்பாக்கத்தைச் சேர்ந்த சுரேஷ் என்கிற மார்க்கெட் சுரேஷை கைது செய்தனர். இந்நிலையில் சுரேஷ் தான் குற்றவாளி என்று எப்படி முடிவு செய்தோம், அவரை எப்படி கைது செய்தோம் என்று காவல்துறையினர் இன்று செய்தியாளர்களை சந்தித்து கூறினர்.

தெற்கு கூடுதல் ஆணையர் தினகரன், இணை ஆணையர் பாபு, தி.நகர் துணை ஆணையர் ஹரிகிரன் ஆகியோர் செய்தியாளர் சந்திப்பில் கூறுகையில்:

"கொள்ளையன் கையுறை பயன்படுத்திக் கொள்ளை அடித்ததால் கைரேகைகள் கிடைக்காமல் போலீசார் விசாரணையை அடுத்தகட்டமாக எடுத்துச் செல்ல முடியாமல் திணறினர்.

சிசிடிவி காட்சி

கடைக்குள் கொள்ளையன் கொள்ளையடித்துக் கொண்டிருக்கும்போது, நகைக்கடையில் செய்துவைத்த நகை வைத்திருக்கும் பாக்கெட்டுகளை வாயால் கடித்து பிரிக்கும்போது, சில வினாடிகள் முகக்கவசத்தை முகத்திலிருந்து இறக்கியுள்ளார். அந்த நேரம் சிசிடிவியில் கொள்ளையனின் முகம் பதிந்துள்ளது. கொள்ளையன் மீசை வைத்திருப்பதும், முக அளவீடுகளும் அடிப்படையாக வைத்து, கொள்ளையனை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.

கைது செய்யப்பட்ட சுரேஷ்

இதனையடுத்து ஏற்கெனவே வீடு புகுந்து கொள்ளையடிக்கும் கொள்ளையர்களின் புகைப்படத்தோடு ஒப்பிட்டுப் பார்த்து ஆய்வு செய்ததில், பாண்டிச்சேரியில் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட சுரேஷ் என்கிற மார்க்கெட் சுரேஷ் முக அளவிடும் மீசையும், தி.நகர் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையனின் முக அளவுகளுடன் ஒத்துப்போனது.

தி.நகர் கொள்ளைச் சம்பவத்தின்போது செல்போன் அழைப்புகளை ஆய்வுசெய்து திருவள்ளூரில் உள்ள சுரேஷ், பெண் தோழி கங்காவுடன் தொடர்புகொண்டதும் தெளிவானது. இதனையடுத்து தனிப்படை திருவள்ளூரில் உள்ள கங்காவை பிடித்து விசாரணை மேற்கொண்டது. கங்காவை கைது செய்து விசாரணை மேற்கொண்டபோது மூன்று பேர் இந்த கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டது அம்பலமானது.

நகைகளை மீட்கும் பணியில் முதற்கட்டமாக, கங்கா வீட்டின் பின்புறம் புதைத்து வைத்திருந்த நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். அதன்பின் செய்யாறில் வெங்கடேசன் மற்றும் அமலராஜிடம் உள்ள நகைகளை பறிமுதல் போலீசார் செய்துள்ளனர். மொத்தமாக பிடிபட்ட மூன்று பேரிடமும் இருந்து சுமார் 1.4 கிலோ தங்கம் மற்றும் 11 கிலோ வெள்ளியை போலீசார் பறிமுதல் செய்தனர்” என்றனர்.

ABOUT THE AUTHOR

...view details