சென்னை அம்பத்தூர் அடுத்த அயப்பாக்கத்தைச் சேர்ந்தவர் தாமோதரன். இவரது மகள் பவித்ரா. இவர் வீட்டின் அருகே உள்ள தனியார் பள்ளியில் நான்காம் வகுப்பு படித்துவருகிறார்.
இவர் நேற்று (ஆக.1) வழக்கம்போல் பள்ளி முடித்து வீடு திரும்பியுள்ளார். வீட்டில் தாயார் பள்ளியில் கொடுக்கப்பட்ட வீட்டுப் பாடத்தை படிக்கச் சொல்லி பவித்ராவை கண்டித்துள்ளார்.
இதனால் மனமுடைந்த சிறுமி வீட்டிலிருந்து மாயமானார். அக்கம் பக்கத்தில் தேடிய பெற்றோர் பின் உடனடியாக காவல் துறையில் புகார் தெரிவித்தனர்.
காணாமல்போன பள்ளி மாணவியை மீட்ட காவல் துறை இதனையடுத்து காவல் துறையினர் மாணவியை அவரது வீட்டிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் மீட்டனர். பின்னர் அம்பத்தூர் காவல் துணை ஆணையர் முன்னிலையில் பெற்றோரிடம் சிறுமியை காவல் துறையினர் ஒப்படைத்தனர்.