தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்த்தாய் வாழ்த்தை மதிக்காத ஆர்பிஐ ஊழியர்கள் - காவல்துறை என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது தெரியுமா? - தமிழ்த்தாய் வாழ்த்தை மதிக்காத ஆர்பிஐ ஊழியர்கள் - காவல்துறை என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது

தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலின்போது ஆர்பிஐ அலுவலர்கள் எழுந்து நின்று மரியாதை செலுத்தாத விவகாரத்தில் புகார் அளிக்கும்பட்சத்தில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சென்னை காவல் துறை தெரிவித்துள்ளது.

rbi Chennai office during Republic Day celebrations did not stand up for tamil thai vazhthu
rbi Chennai office during Republic Day celebrations did not stand up for tamil thai vazhthu

By

Published : Jan 26, 2022, 3:05 PM IST

Updated : Jan 26, 2022, 3:17 PM IST

சென்னை: 73ஆவது குடியரசு தின விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில் இன்று காலை ரிசர்வ் வங்கி வளாகத்தில் குடியரசு தின நிகழ்ச்சி ஆர்பிஐ மண்டல இயக்குநர் சுவாமி தலைமையில் நடைபெற்றது. அப்போது நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டபோது ஆர்பிஐ அலுவலர்கள் எழுந்து நிற்காமல் இருந்தனர்.

இது குறித்து செய்தியாளர்கள் ஆர்பிஐ அலுவலர்களிடம் கேள்வி எழுப்பிய போது தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு எழுந்து நிற்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் நீதிமன்ற உத்தரவு இருப்பதாகவும் செய்தியாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆலோசனை கேட்டு வரும் காவல் துறை

இந்த நிலையில் இவ்விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக உரியப் புகார் அளிக்கும்பட்சத்தில் சம்பவம் தொடர்பான வீடியோ ஆதாரங்களை ஆய்வு செய்து, தமிழ்நாடு அரசாணை உத்தரவுப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சென்னை காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சட்ட வல்லுநர்களிடம் ஆலோசனை கேட்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஜயேந்திரரும் தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரமும்

ஏற்கெனவே கடந்த 2018ஆம் ஆண்டு சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியின்போது தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்குக் காஞ்சி விஜயேந்திரர் எழுந்து நின்று மரியாதை செலுத்தாத விவகாரம் சர்ச்சையாகி நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

தமிழ்த்தாய் வாழ்த்தை மதிக்காத ஆர்பிஐ ஊழியர்கள் - காவல்துறை என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது தெரியுமா?

வழக்கை விசாரித்த மதுரை உயர் நீதிமன்றம் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு எழுந்து நிற்க வேண்டும் என்று ஒரு உத்தரவும் கிடையாது எனக் கடந்த டிசம்பர் 10ஆம் தேதி கருத்து தெரிவித்து வழக்கை முடித்து வைத்தது.

இதனையடுத்து கடந்த டிசம்பர் 14ஆம் தேதி அரசு மற்றும் அரசு சார்ந்த நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலின் போது அனைவரும் கட்டாயமாக எழுந்து நிற்க வேண்டுமென தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஆர்பிஐ அலுவலர்கள் தமிழ்த்தாய் பாடலுக்கு எழுந்து நிற்காத விவகாரம் தொடர்பாகப் புகார் வந்து நிரூபணமானால் அரசு உத்தரவுக்கு கீழ்ப்படியாமல் இருத்தல் என்ற பிரிவு 188இன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படும் என சென்னை காவல் துறை தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: 'மாநிலப் பாடல் தமிழ்த்தாய் வாழ்த்து' பாடப்படும்போது எழுந்து நிற்பது கட்டாயம் - அரசாணை

Last Updated : Jan 26, 2022, 3:17 PM IST

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details