தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

Koyambedu raid; கோயம்பேடு மார்க்கெட்டில் காவல்துறையினர் திடீர் ஆய்வு; 7 பேர் கைது - latest tamil news

பொங்கல் பண்டிகையை ஒட்டி சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில், காவல் துறையினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

கோயம்பேடு மார்க்கெட்டில் காவல்துறையினர் திடீர் ஆய்வு
கோயம்பேடு மார்க்கெட்டில் காவல்துறையினர் திடீர் ஆய்வு

By

Published : Jan 9, 2023, 6:59 PM IST

கோயம்பேடு மார்க்கெட்டில் காவல்துறையினர் திடீர் ஆய்வு

சென்னை: பொங்கல் பண்டிகையை ஒட்டி கூட்ட நெரிசலை பயன்படுத்தி கோயம்பேடு மார்க்கெட்டில் செயின், செல்போன் பறிப்பு, கஞ்சா விற்பனை, இருசக்கர வாகனத் திருட்டு போன்ற சம்பவங்கள் நடைபெற வாய்ப்புள்ளதாக கோயம்பேடு காவல் துறையினருக்கு, ரகசியத் தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் கோயம்பேடு ஆய்வாளர் சந்திரசேகர் தலைமையிலான காவல் துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

குறிப்பாக கோயம்பேடு மார்க்கெட்டில் சந்தேகப்படும்படியாக உள்ள நபர்களை, ஃபேஸ் டிடெக்டர் கேமரா மூலமாக புகைப்படம் எடுத்து சோதனை செய்தனர். மேலும் கடைகளின் மாடிகளில் பதுங்கி சீட்டு, சூதாட்டம் போன்றவற்றில் ஈடுபட்டவர்களை ஏணி மீது ஏறி காவல் துறையினர் கைது செய்தனர்.

கடைகளில் குட்கா, கஞ்சா போன்ற போதைப் பொருட்களை விற்போர் குறித்து கண்டறிய சோதனை மேற்கொண்ட காவலர்கள், சட்டவிரோதமாக அதனை விற்பனை செய்து வந்த கடைக்காரர்களை கைது செய்தனர். இந்த சோதனையில் இருசக்கர வாகன திருடன், குட்கா வியாபாரி, சூதாட்டத்தில் ஈடுபட்டவர் என மொத்தம் 7 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

இதையும் படிங்க:Pongal Special Bus: பொங்கல் பண்டிகை சிறப்புப்பேருந்துகளுக்கு 1,33,659 பேர் முன்பதிவு

ABOUT THE AUTHOR

...view details