காணும் பொங்கலை ஒட்டி, சென்னை மாநகர காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "மெரினா கடற்கரையில் 5 ஆயிரம் காவல் துறையினரும், இதர மக்கள் கூடும் பொழுதுபோக்கு மற்றும் சுற்றுலாத் தலங்களிலும் காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவர்.
சுற்றுலாப் பயணிகள் கடலில் குளிக்க தடை விதித்தும், படகு சவாரி செய்யவும் தடை செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு மீறி கடலில் குளித்தால் பாதுகாப்பு மீட்புப் பணிகளுக்காக 150 இயந்திர படகுகள் தயார் நிலையில் வைக்கப்படுவதுடன், நீச்சல் வீரர்கள் குழுவினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருப்பார்கள்.