தமிழ்நாட்டில் 234 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் ஒரே கட்டமாக கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி வாக்குபதிவு நடைப்பெற்றது. இந்த தேர்தலில் வாக்குப்பதிவில் ஈடுபடுத்தப்பட்ட வாக்குபதிவு இயந்திரங்கள், 75 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு சீல் செய்யப்பட்டன. அங்கு மூன்றடுக்கு பாதுகாப்பு மற்றும் சிசிடிவி கேமராக்கள் உதவியுடன் தீவிர கண்காணிப்பு செய்யப்படுகிறது.
நாளை வாக்கு என்ணிக்கை நடைபெற உள்ளதால் 75 வாக்கு எண்ணும் மையங்களில் துணை ராணுவத்தினர், ஆயுதப்படை போலீசார், தமிழ்நாடு சிறப்பு காவல் படை,உள்ளூர் காவல் துறை என 50ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட உள்ளனர். குறிப்பாக சென்னையில் உள்ள லயோலா கல்லூரி, ராணி மேரி கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகம், மெட்ராஸ் கிறிஸ்தவ கல்லூரி உள்ளிட்ட 4 வாக்கு எண்ணும் மையங்களில் நான்கு அடுக்கு பாதுகாப்புடன், 3000 காவல் துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட உள்ளனர்.
மேலும், நாளை முழு ஊரடங்கு என்பதால் பொதுமக்கள் அநாவசியமாக வெளியே வருவதை தடுப்பதற்காக, நாளை முழுவதும் பாதுகாப்பு பணிக்காக 50 ஆயிரம் காவல் துறையினர் குவிக்கபட உள்ளனர். சென்னையில் 7 ஆயிரம் காவல் துறையினர் பணியில் ஈடுபட உள்ளதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா பரவல் அதிகமாக பரவி வரும் சூழலில் இந்த வாக்குபதிவானது நடைபெறவுள்ளதால் தேர்தல் ஆணையம் மற்றும் காவல் துறையினர் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.