தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கிய அதிமுக செயலாளரிடம் காவல்துறை விசாரணை! - chennai police caught ADMK member

சென்னையில் வக்காளர்களுக்கு கியூ-ஆர் கோடு டோக்கன் வழங்கிய அதிமுக நிர்வாகியிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.

வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கிய அதிமுக செயலாளரிடம் காவல்துறை விசாரணை!
வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கிய அதிமுக செயலாளரிடம் காவல்துறை விசாரணை!

By

Published : Feb 20, 2022, 9:11 AM IST

சென்னை:சென்னை மயிலாப்பூர் கேசவபுரம் தெற்கு கோவில் தெருவில் வீடு வீடாக டோக்கன் கொடுக்கப்படுவதாக 9ஆவது மண்டல பறக்கும்படை தேர்தல் அலுவலர் தேவகுமாரனுக்குத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, தேர்தல் பறக்கும் படை அலுவலர் மற்றும் மயிலாப்பூர் காவல் துறையினர், மயிலாப்பூர் கேசவபுரம் தெற்கு கோவில் தெருவிற்குச் சென்று கண்காணித்தனர். அப்போது, அதிமுகவைச் சேர்ந்த 124ஆவது வட்ட செயலாளர் தங்கதுரை என்பவர் வீடு வீடாகச் சென்று டோக்கன் கொடுக்கும்போது மடக்கிப் பிடித்தனர்.

அவரிடம், வாக்களர்கள் அளிக்க 'கியூ-ஆர் குறியீடு' (QR Code) கொண்ட அதிமுக சின்னம் ஜெயலலிதா படம் அச்சடிக்கப்பட்ட கார்டுகள் இருந்தது. அதனைப் பறிமுதல் செய்து, அவர் வைத்திருந்த நோட்டு ஒன்றில் பல பெயர்கள் கையால் எழுதப்பட்ட துண்டுச்சீட்டு வைத்திருந்ததையும் பறிமுதல் செய்தனர்.

124-வது வட்ட செயலாளர் தங்கதுரை

இதையடுத்து, தங்கதுரையை மயிலாப்பூர் காவல் துறையினர் காவல் நிலையம் கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெயர்கள் எழுதப்பட்ட துண்டுச்சீட்டு

இதையும் படிங்க:ஓட்டுக்கு பணம் கொடுத்த அதிமுக

ABOUT THE AUTHOR

...view details