தமிழ்நாடு முழுவதும் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டப்பேரவை பொதுத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் ஆணையம் இறுதி கட்ட பணிகளை தீவிரப்படுத்தி உள்ளது. அதனைத் தொடர்ந்து சென்னை ஆர் கே நகர் தொகுதிக்கு உள்பட்ட பகுதியில் வசிக்கும் காவல்துறையினர்களுக்கு ஆர் கே நகரில் அமைந்துள்ள அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் வாக்குப் பதிவு மையம் அமைக்கப்பட்டு தபால் வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது.
வாக்காளர் அடையாள அட்டை, காவலர் அடையாள அட்டை, ஆதார் அட்டை உள்ளிட்ட ஏதேனும் ஒரு ஆவணத்தை கொண்டு வரும் காவலர்கள் வாக்குப்பதிவு மையத்திற்கு வெளியில் ஒட்டப்பட்டுள்ள பட்டியலில் தங்களுடைய பெயர் மற்றும் வரிசை எண்ணை பார்த்துக் கொண்டு உள்ளே செல்கின்றனர்.
ஆர்கே நகரில் தபால் வாக்குகள் செலுத்திய காவலர்கள்! - postal vote
சென்னை: ஆர்கே நகர் சட்டப்பேரவை தொகுதியில் பணியில் ஈடுபடும் காவலர்கள் 140 பேர் மற்றும் ஊர்க்காவல் படையினர் 23 பேர் தபால் வாக்குகள் மூலம் தங்களுடைய வாக்கைப் பதிவு செய்தனர்.
பிறகு அவர்களுடைய பெயர் மற்றும் விவரங்களை சரிபார்த்த பின்னர் அவர்களுக்கான தபால் கவர் ஆனது வழங்கப்படுகிறது. அதில் உறுதிமொழி படிவம் வாக்குசீட்டு என இரண்டு தாள்கள் வழங்கப்படுகின்றன. உறுதிமொழி படிவத்தில் கையொப்பம் இட்டு மற்றொரு படிவத்தில் தாங்கள் விரும்பும் சின்னத்திற்கு பேனா மூலம் 'டிக்' செய்து, இரண்டு படிவங்களையும் ஒரு கவரில் ஒன்றாக சேர்த்து வாக்கு பெட்டியில் போட்டு விட அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இதையும் படிங்க:ரிஷப் பந்த் நல்ல கேப்டனாக செயல்படுவார்- சுரேஷ் ரெய்னா