தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மெரினாவில் ஜோடியிடம் கைவரிசை.. போலி போலீஸ் சிக்கியது எப்படி?

சென்னை மெரினாவில் ஆண் நண்பருடன் இருந்த போது புகைப்படங்களை எடுத்து பெண்ணை மிரட்டி 2 லட்சம் ரூபாய் பணம் பறித்த போலி போலீஸை போலீசார் கைது செய்துள்ளனர்.

Etv Bharatபோலீஸ் எனக் கூறி பெண்ணிடம் பண மோசடி  - 2லட்சம் ரூபாய் பணம் பறித்த நபர் கைது
Etv Bharatபோலீஸ் எனக் கூறி பெண்ணிடம் பண மோசடி - 2லட்சம் ரூபாய் பணம் பறித்த நபர் கைது

By

Published : Nov 29, 2022, 7:29 PM IST

சென்னை:வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்த 35 வயதான பெண், திருமணமாகி குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 6-ஆம் தேதி ஆண் நண்பர் கிஷோர் என்பவருடன் விவேகானந்தர் இல்லம் அருகே உள்ள மெரினா கடற்பரப்பில் அமர்ந்து நெருக்கமாக இருந்ததாக கூறப்படுகிறது.

அப்போது அங்கு மிடுக்காக வந்த நபர் ஒருவர் "தான் காவல்துறையில் உதவி ஆணையராக பணியாற்றி வருவதாக அறிமுகம் செய்து கொண்டு, பின்னர் அந்த நபர் நீங்கள் நெருக்கமாக இருந்ததை புகைப்படம் எடுத்துவிட்டதாகவும், அந்த புகைப்படத்தை உங்கள் வீட்டில் காண்பித்துவிடுவேன் என மிரட்டி அந்த பெண்ணின் விவரங்களை பெற்று அனுப்பி வைத்துள்ளார்.

இதனையடுத்து அந்த நபர் தொடர்ச்சியாக அப்பெண்ணை தொடர்பு கொண்டு, நெருக்கமான புகைப்படங்களை வெளிவிடாமல் இருக்க பணத்தை கேட்டு மிரட்டி வந்துள்ளார். இதனால் அப்பெண் அவமானத்திற்கு பயந்து சிறுக சிறுக ஜிபே மூலமாகவும், நேரிலும் சுமார் 2 லட்சம் ரூபாய் வரை அந்த நபருக்கு கொடுத்துள்ளார். இதே போல கடந்த 3 வருடங்களாக அப்பெண்ணிடம் அந்த நபர் பணப்பறிப்பில் ஈடுபட்டு வந்துள்ளார்.

அந்த வகையில் நேற்று (நவ.28) அந்த நபர் மீண்டும் 2 லட்ச ரூபாய் பணம் கேட்டு அப்பெண்ணை மிரட்டியதால், மன உளைச்சல் அடைந்த அப்பெண் வேறு வழியின்றி மெரினா காவல் நிலையத்தில் அந்த நபர் மீது புகார் அளித்துள்ளார்.

புகாரின் அடிப்படையில் வழக்குpபதிவு செய்த மெரினா போலீசார் பாதிக்கப்பட்ட பெண்ணை வைத்து அந்த நபருக்கு செல்போனில் தொடர்பு கொண்டு தி.நகர் பேருந்து பணிமனைக்கு பணம் தருவதாக கூறி வரவழைத்து கையும் களமாக பிடித்தனர். பிடிப்பட்ட நபரிடம் நடத்திய விசாரணையில் அந்த நபர் மணலி மாத்தூரை பகுதியை சேர்ந்த சதீஷ்குமார்(40) என்பதும், துறைமுக ஒப்பந்த பணியாளரான சதீஷ் அப்பெண்ணிடம் போலீஸ் எனக்கூறி ஏமாற்றி லட்சக்கணக்கில் பணம் பறித்ததும் தெரியவந்தது. அதனை தொடர்ந்து போலீசார் போலி போலிஸான சதீஷ்குமாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க:தொலைபேசி அழைப்புகள் ஒட்டுக்கேட்பு ..! சவுக்கு சங்கர் குற்றச்சாட்டு

ABOUT THE AUTHOR

...view details