தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சொகுசு கார் மோதி காவலர் உயிரிழப்பு: பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி! - bike car crash near chennai

சென்னை: டி.ஏ.வி பள்ளி அருகே கல்லூரி மாணவர் ஓட்டி வந்த சொகுசு கார் மோதி ஆயுதப்படை காவலர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சிசிடிவி காட்சி
சிசிடிவி காட்சி

By

Published : Jan 19, 2021, 11:12 AM IST

சென்னை ஆயுதப்படை காவலராக பணிபுரிந்து வருபவர்கள் கார்த்திக்(34), ரவீந்திரன்(32). இருவரும் கோயம்பேட்டில் பாதுகாப்பு பணிக்காக இன்று அதிகாலை 4.45 மணியளவில் இருசக்கர வாகனத்தில் ஆவடியிலிருந்து புறப்பட்டனர். அம்பத்தூர் எஸ்டேட் சாலை வழியாக வந்து முகப்பேர் கிழக்கில் உள்ள டி.ஏ.வி பள்ளி அருகே வலது பக்கம் திரும்பும் போது, எதிர் திசையில் அதிவேகமாக வந்த சொகுசு கார் ஒன்று, காவலர்கள் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மீது வேகமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ரவீந்திரன் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வாகனத்தை ஓட்டி வந்த கார்த்திக்கு கை மற்றும் காலில் பலத்த காயம் ஏற்பட்டது.

சிசிடிவி காட்சி

இந்த விபத்து தொடர்பாக பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில், திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். உயிரிழந்தவரின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆயுதப்படை காவலர் ரவீந்திரன்

விசாரணையில், சொகுசு காரை ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்தியது அம்பத்தூரை சேர்ந்த கல்லூரி மாணவர் அமர் நாத்(25), காரின் உரிமையாளரான வருண் சேகர்(20), அவரது நண்பர் ரோகித் சூர்யா(21) என்பது தெரியவந்து. இதையடுத்து, மூவரையும் கைது செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தினர். ரோகித் சூர்யாவின் பிறந்தநாள் நாள் விழாவை கொண்டாடிவிட்டு வருண் சேகர் வீட்டிற்கு வரும் போது விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. இவ்விபத்தின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த நொளம்பூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details