நாடு முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்ட செல்கிறது. இதில், சென்னை மாநகராட்சி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கை சரியான முறையில் அமல்படுத்தும் வகையில் சிறப்பாக பணிபுரிந்துவரும் காவல் துறையினர் அதிகளவில் கரோனா பாதிப்புக்கு ஆளாகிவருகின்றனர்.
சென்னையில் பணிபுரிந்துவந்த ஐபிஎஸ் அதிகாரியான துணை ஆணையருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். இந்நிலையில் அவரது அலுவலகத்தில் பணிபுரிந்த இரண்டு காவலர்களுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதேபோல் டிஜிபி அலுவலகத்தில் பணியாளராக பணிப்புரிந்துவந்த காவலர் ஒருவருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவரது துறையில் பணியாற்றிவந்த இருவருக்கு ஏற்கெனவே கரோனா தொற்று இருப்பது தெரியவந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.