தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காவலரின் மனிதநேயமிக்க செயலுக்கு குவியும் பாராட்டுகள்! - காவல் ஆய்வாளரின் மனித நேயம்

சென்னை: சாலை விபத்தில் காயமடைந்த மூதாட்டியை தக்க நேரத்தில் மருத்துவமனையில் சேர்க்க உதவிய காவல் ஆய்வாளருக்கு பாராட்டுகள் குவிகிறது.

police

By

Published : Nov 6, 2019, 10:09 PM IST

சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலையம் அருகே சென்னை திருமங்கலத்தைச் சேர்ந்த 60 வயது மதிக்கத்தக்க வயதான தம்பதி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனம் வேகத்தடை மீது ஏறியபோது நிலைத்தடுமாறி கீழே விழுந்ததில் மூதாட்டிக்கு பலத்த அடிபட்டது.

காவல் நிலையம் எதிரே இச்சம்பவம் நேரிட்டதால் தகவலறிந்து வந்த அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் ஆய்வாளர் விஜயராகவன் மூதாட்டியை அவரது காவல் வாகனத்தில் ஏற்றி அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தார்.

மூதாட்டிக்கு உதவிய காவலர் விஜயராகவன்

ஆம்புலன்ஸ் வருகையை எதிர்பார்க்காமல் தன்னுடைய காவல் வாகனத்தில் தக்க நேரத்தில் மூதாட்டியை மருத்துவமனையில் சேர்க்க ஆய்வாளர் விஜயராகவன் உதவியுள்ளார். ’காவல்துறை உங்கள் நண்பன்’ என்ற சொல்லுக்கு ஏற்றவாறு காவல் ஆய்வாளரின் இந்த மனித நேயமிக்க செயலை பொதுமக்கள் மட்டுமின்றி சக காவல் அதிகாரிகளும் பாராட்டியுள்ளனர்.

இதையும் படிங்க: திருட்டுப் போன செல்ஃபோன்களை உரியவர்களிடம் ஒப்படைத்த காவல்துறை!

ABOUT THE AUTHOR

...view details