சென்னை:ஓஎம்ஆர் சாலை ராஜீவ் நகர் சிக்னல் அருகே நேற்று (ஜூன் 3) மர்ம பெட்டி ஒன்று கிடந்தது. இதனைக் கண்ட கண்ணகி நகரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ராஜேஷ்(30) கண்ணகிநகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
அதன்படி போலீசார் தாம்பரம் காவல் ஆணையரக வெடிகுண்டு நிபுணர்கள், கிராம நிர்வாக அலுவலர் பாக்கிய லஷ்மி ஆகியோருடன் சம்பவயிடத்திற்கு விரைந்தனர்.அப்போது கிராம நிர்வாக அலுவலர் பாக்கிய லஷ்மி முன்பாக பெட்டி திறக்கப்பட்டது.
ஓஎம்ஆர் சாலையில் கிடந்த பெட்டி அதில் இரும்பாலான லாக்கர் பெட்டி இருந்தது. அதையும் எந்திரம் மூலம் பிரிந்து பார்த்தபோது கட்டுக்கட்டாக 35 கட்டு வெள்ளை தாள்களும், 3 இங்க் (மை) பாட்டில்களும் இருந்தன. இதையடுத்து, அவற்றை பறிமுதல் செய்த போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
முதல்கட்ட தகவலில், மேற்கூறிய பொருள்கள் கள்ள நோட்டு அச்சடிக்கும் கும்பலின் உடையதாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: திருமணமான 6 மாதத்தில் கணவன் மனைவி தூக்கிட்டு தற்கொலை..!