சென்னை: கோயம்பேடு சேம்பாத்தம்மன் நகர் 1ஆவது செக்டார் பகுதியைச் சேர்ந்தவர் ரங்கநாதன் (77). இவரது மகன் ஞானம் (55). இவருக்கு திருமணமாகவில்லை. தந்தை ரங்கநாதனுக்கு இதய பிரச்சினை இருந்தது. அவரது மகன் ஞானத்திற்கு சிறுநீரகப் பிரச்சினை இருந்து வந்துள்ளது.
உறவினர்கள் யாரும் ஆதரவு கொடுக்காததால் நேற்று (மார்ச் 07) வீட்டில் ரங்கநாதன் மின்விசிறியிலும், அவரது மகன் ஞானம் ஜன்னல் கம்பியிலும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். இது குறித்து தகவலறிந்து கோயம்பேடு காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர்.