சென்னை:மெரினா கடற்கரையில் நொச்சிக்குப்பத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் நேற்று (அக்.25) மணற்பரப்பில் நடந்துகொண்டிருந்தபோது கீழே கைத்துப்பாக்கி ஒன்றைக் கண்டெடுத்துள்ளார். அந்த துப்பாக்கியை கடலோர பாதுகாப்பு குழுமம் உயிர்காக்கும் பிரிவு முதல்நிலை காவலர் ஆரோக்கியராஜ் என்பவரிடம் கொடுத்துள்ளார். அதனையடுத்து மெரினாவில் கண்டெடுக்கப்பட்ட கைத்துப்பாக்கியை மெரினா காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.
மெரினாவில் ஜெர்மன் ரக துப்பாக்கி கண்டெடுப்பு - Chennai Police investigating
சென்னை மெரினா கடற்கரையில் ஜெர்மன் ரக துப்பாக்கி கண்டெடுக்கப்பட்ட விவகாரத்தில் அதன் உரிமையாளர் குறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
அதோடு அதன் உரிமையாளர் குறித்து விசாரிக்க புகாரும் அளிக்கப்பட்டது. இந்தப் புகாரின் அடிப்படையில் மெரினா போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில் கீழே கிடந்த கைத்துப்பாக்கி ஜெர்மன் ரக துப்பாக்கி என்பதும், அதில் தோட்டாக்கள் ஏதும் இல்லை என்பதும் தெரியவந்தது. இந்த கைத்துப்பாக்கியின் உரிமையாளர் யார்? தோட்டக்கள் இல்லாத துப்பாக்கி எப்படி கடற்கரைக்கு வந்தது? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: சென்னையில் தீபாவளி பண்டிகையில் 354 வழக்குகள் பதிவு