சென்னை: சிட்லபாக்கம் சபரி தெருவைச் சேர்ந்தவர் மணி பிரசாந்த்(21). இவர் தாம்பரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவருடன் பணியாற்றிய இளம்பெண் ஒருவரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மணி பிரசாந்த், நண்பர்களுடன் இணைந்து மது அருந்திவிட்டு நடனமாடி உள்ளார். பின்னர் 10.30 மணியளவில் திடீரென மணி பிரசாந்திற்கு வாந்தி ஏற்பட்டதுடன், மூச்சு விடுவதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து திடீரென்று அவர் மயங்கி விழுந்ததுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள், உடனடியாக மணி பிரசாந்தை மீட்டு சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இதையும் படிங்க:Dhoni surgery : டோனிக்கு முழங்காலில் அறுவை சிகிச்சை... மருத்துவர்கள் அறிவுரை!