தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காரில் வந்த குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல்: காவல் துறை விசாரணை! - கொலை மிரட்டல் விடுத்த நபர்

சென்னை தாம்பரம் அருகே காரில் வந்தவர்களை வழிமறித்து, கார் கண்ணாடிகளை உடைத்து, கொலை மிரட்டல் விடுத்த நபர் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

காரில் வந்த குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல்
காரில் வந்த குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல்

By

Published : Nov 2, 2020, 3:38 PM IST

சென்னை: தாம்பரம் அருகே குடும்பத்தினருடன் காரில் வந்தவர்களை வழிமறித்து, கொலை மிரட்டல் விடுத்த நபர் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

சென்னை தாம்பரம் அடுத்த முடிஞ்சூர் சிவலிங்கம் நகர் பகுதியில் கார் ஓட்டுநராகப் பணிபுரிந்துவருபவர் ஜெபமாலிக்தாஸ் (50). இவர் இன்று (நவ. 02) தனது மனைவி சுதாராணி, மகளுடன் காரில் சென்றுகொண்டிருந்தார்.

அப்போது, வெங்கடேஷ் (40) என்பவர் காரை வழிமறித்து, தான் வைத்திருந்த உருட்டுக்கட்டையால் காரின் முன்பகுதி, பின்பகுதிகளிலுள்ள கண்ணாடிகளை அடித்து நொறுக்கியுள்ளார்.

இதையடுத்து, காரிலிருந்தவர்கள் அலறியடித்தபடி அங்கிருந்து ஓடியுள்ளனர். அப்போது அவர் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து டயர்களை கிழித்துவிட்டு, காரில் வந்தவர்களுக்கு கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் மனைவி கூறியதாவது, “நாங்கள் காரில் செல்லும்போது சாலையில் மாடுகள் படுத்திருந்தன. அப்போது தெரியாமல் ஒரு மாட்டின் மீது கார் உரசியது. இதனால், அவர்கள் எங்களைத் தாக்கியுள்ளனர்” எனத் தெரிவித்தார்.

இச்சம்பவம் குறித்து, ஜெபமாலிக்தாஸ் பீர்க்கன்காரணை காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார். இப்புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: குடும்பத் தகராறில் அக்கா கணவரை கொலை செய்த தம்பி

ABOUT THE AUTHOR

...view details