சென்னை காசிமேடு பகுதியைச் சேர்ந்தவர் ரவுடி நாராயணன் (29). இவரது மனைவி குடும்பத் தகராறு காரணமாக தீக்குளித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், அவர் இன்று (ஜன. 29) தனது மனைவியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பார்த்துவிட்டு வீடு திரும்பியுள்ளார்.
அப்போது, அவர் காசிமேடு துறைமுகம் பகுதியில் உணவருந்திக் கொண்டிருந்தபோது அங்கு வந்த அடையாளம் தெரியாத நான்கு பேர் கொண்ட கும்பல் அவரை ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்துள்ளது.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த காசிமேடு மீன்பிடி துறைமுக காவல் துறையினர், நாராயணனின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.