சென்னை அம்பத்தூரை அடுத்த பாடி வன்னியர் தெருவைச் சேர்ந்தவர் தேஸ்வா (39). இவர், வில்லிவாக்கத்திலுள்ள தனியார் நிறுவனத்தில் அலுவலராகப் பணியாற்றிவருகிறார். இவரது மனைவி எழிலரசி. இவர் ஐ.டி. ஊழியராகவுள்ளார்.
இந்நிலையில் நேற்று (அக். 25) தேஸ்வா வீட்டைப் பூட்டிவிட்டு, எழிலரசியுடன் கல்பாக்கத்திலுள்ள உறவினர் திருமணத்திற்குச் சென்றுள்ளார். இந்நிலையில், இன்று (அக். 26) அவரது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்ட அக்கம்பக்கத்தினர் இது குறித்து தேஸ்வாவிற்குத் தகவல் கொடுத்துள்ளனர்.