கடந்த 2012 - 2015ஆம் ஆண்டுகளில் அரசு வேலை வாங்கி தருவதாக 92 லட்சம் பணம் வாங்கி தனியார் கல்லூரி, பள்ளி ஆசிரியர்களை ஏமாற்றியுள்ளதாக முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் சகோதரர் நல்லதம்பி மீது மத்திய குற்றப்பிரிவில் வழக்கு நிலுவையில் உள்ளது.
மோசடி புகார்... முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் தம்பியிடம் காவல்துறை விசாரணை! - fraud case
சென்னை: அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 92 லட்சம் மோசடி செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் தம்பியும், அமமுக வழக்கறிஞர் பிரிவு மாவட்ட செயலாளருமான நல்லதம்பியிடம் வேப்பேரி காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.
![மோசடி புகார்... முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் தம்பியிடம் காவல்துறை விசாரணை!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/images/768-512-3108943-thumbnail-3x2-kalimuthu.jpg)
இந்நிலையில், பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் உள்ள பாராஸ் கெஸ்ட் ஹவுஸில் தங்கியிருந்த நல்லதம்பியின் அறைக்கு வந்து பணம் கொடுத்த ஆசிரியர்கள் அருணகிரி, வசந்த குமார், சிவக்குமார், கண்ணன், சாமிக்கன்னு ஆகியோர் கடந்த 24ஆம் தேதி இரவு நல்லதம்பிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக நேற்று (வியாகிழக்கிழமை) வேப்பேரி காவல் நிலையத்தில் நல்லதம்பி புகார் அளித்தார். இதனையடுத்து,
இருதரப்பினரையும் காவல் நிலையம் வரவழைத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இந்த வழக்கு நிலுவையில் இருப்பதால் இருதரப்பினரையும் காவல்துறை சமாதானமாக திருப்பினர்.