தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னையில் பொதுமக்கள் முன்னிலையில் ஆபாசமாகப்பேசி மோதிக்கொண்ட இரு காவல்துறையினர் - Inspector Prabhu

சென்னையில் பொதுமக்கள் முன்னிலையில் ஆபாசமாகப் பேசி மோதிக்கொண்ட காவல் துறையினரின் செயல் பொதுமக்களிடையே அச்சத்தை உண்டாக்கியது.

சென்னையில் பொதுமக்கள் முன்னிலையில் ஆபாசமாக பேசிக்கொண்ட காவல் ஆய்வாளர்கள்
சென்னையில் பொதுமக்கள் முன்னிலையில் ஆபாசமாக பேசிக்கொண்ட காவல் ஆய்வாளர்கள்

By

Published : Oct 2, 2022, 8:18 PM IST

சென்னை:அண்ணா சதுக்கம் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த மாநகரப் பேருந்து ஓட்டுநரை பேருந்தில் இருந்த போதை ஆசாமிகள் தகாத வார்த்தையால் திட்டியதால், பேருந்து ஓட்டுநர் ஆறுமுகம் ஆற்காடு சாலையில் பேருந்தினை நடுரோட்டில் நிறுத்திவிட்டு போதை ஆசாமிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதுகுறித்து கே.கே. நகர் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஆய்வாளர் பிரபு பணி முடித்து வீட்டிற்குச்சென்று கொண்டு இருந்ததால் காவல் நிலைய தலைமை காவலரிடம் கூறி, உதவி ஆய்வாளர் செந்தில் குமார் மற்றும் காவலர்களை சம்பவ இடத்திற்குச்செல்லுமாறு தெரிவித்துள்ளார்.

ஆனால், உதவி ஆய்வாளர் செந்தில்குமார் சம்பவ இடத்திற்குச் செல்லாமல் அலட்சியமாக இருந்து உள்ளார். பின்னர் கே.கே. நகர் காவல் ஆய்வாளர் பிரபு நேரடியாக சம்பவ இடத்திற்குச்சென்று பார்த்தபோது, அங்கு தாமதமாக வந்த உதவி ஆய்வாளர் செந்தில் குமாரிடம் இது குறித்து விளக்கம் கேட்டுள்ளார்.

இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவருக்கு ஒருவர் ஆபாசமாகத் திட்டி மோதிக்கொண்டனர். இது அங்கு இருந்த பொதுமக்களிடையே பரபரப்பினை ஏற்படுத்தியது. இச்சம்பவம் குறித்து அண்ணாநகர் உதவி ஆணையர், காவல் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் இடம் துறை ரீதியான விசாரணை நடத்தி வருகிறார்.

இதையும் படிங்க:பேருந்தில் மனைவியிடம் தகாத முறையில் நடந்தவரை தட்டிக்கேட்ட கணவர் - காவலர் எனக்கூறி மிரட்டிய ஆசாமி

ABOUT THE AUTHOR

...view details