தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆவடி காவல் ஆய்வாளருக்கு கரோனா உறுதி! - சென்னை கரோனா உறுதி

சென்னை: ஆவடி காவல் நிலையத்தில் பணியாற்றிய ஆய்வாளர், உதவி ஆய்வாளருக்கு கரோனா தொற்று உறுதியானது.

ஆவடி காவல் ஆய்வாளருக்கு கரோனா உறுதி!
Police inspector affected by corona

By

Published : Sep 8, 2020, 9:45 PM IST

சென்னை ஆவடி காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் காளிராஜ், சப்- இன்ஸ்பெக்டராக கார்த்திக் ஆகியோர் பணியாற்றி வருகின்றனர்.

இதற்கிடையில், கடந்த ஐந்து மாதமாக இவர்கள் இருவரும் ஊரடங்கு காலத்தில் தொற்று நோய் தடுப்பு பணியில் தீவிரமாக பணியாற்றி வந்தனர்.

இதனால், இவர்களுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து அவர்கள் இருவரும் தொற்று தொடர்பாக தங்களை பரிசோதனைக்கு உட்படுத்தி கொண்டனர். இந்நிலையில் நேற்று இவர்கள் இருவருக்கும் தொற்று இருப்பது உறுதியானது.

இதனையடுத்து, ஆய்வாளர் காளிராஜ் ராயபுரத்திலுள்ள தனது வீட்டிலும், உதவி ஆய்வாளர் கார்த்திக் ஆவடி அருகே வெள்ளானூரிலுள்ள தனது வீட்டிலும் தனிமைபடுத்தி கொண்டனர். மேலும், அவர்கள் வீடுகளில் தங்களுக்குத் தேவையான சிகிச்சைகளை பெற்று வருகின்றனர்.

இதனையடுத்து, ஆவடி மாநகராட்சி நிர்வாகம் ஆவடி காவல் நிலைய பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளித்து, கரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், அவர்கள் இருவருடன் தொடர்பிலுள்ள காவலர்களும் தொற்று தொடர்பாக பரிசோதனை செய்ய முடிவு செய்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details