தீவர வாகன சோதனையில் காவல் துறை: வாகன ஓட்டிகளுக்கு அறிவுரை! - vehicle inspection
சென்னை: புறநகர் பகுதிகளில் தீவர வாகன சோதனையில் காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழ்நாட்டில் கரோனா இரண்டாம் அலை நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில் அதனை கட்டுப்படுத்தும் விதமாக இன்று (மே 10) முதல் வருகின்ற மே 24ஆம் தேதிவரை தமிழ்நாடு முழுவதும் சில கட்டுப்பாடுகளுடன் ழுழு ஊரடங்கு அமலில் இருக்கிறது.
அந்த வகையில் பொது போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சென்னை புறநகர் பகுதிகளான பெருங்களத்தூர், தாம்பரம் சுற்றுவட்டார முக்கிய சந்திப்புகளில் தடுப்புகள் அமைத்து காவல் துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இதில் அரசு அலுவலர்கள், களப்பணியாளர்கள் மருத்துவ துறை சார்ந்த வாகனங்கள் அனுமதிக்கப்ட்டு வருகின்றனர். மேலும் அத்தியாவசிய பணிகள் மற்றும் மருத்துவத்திற்கு செல்லும் வாகனங்களில் வருபவர்களிடம் அடையாளம் அட்டை சோதனை செய்த பின்னரே அனுமதிக்கபடுகின்றனர்.
தேவையின்றி சுற்றித் திரியும் வாகன ஓட்டிகளிடம் காவல் துறையினர், அறிவுரை கூறி திருப்பி அனுப்பி வருகின்றனர்.