தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மனவளர்ச்சி குன்றிய 1ஆம் வகுப்பு மாணவிக்கு சூடு வைத்து கொடுமை - பள்ளி நிர்வாகம் மீது வழக்கு - fir aganist school management

சென்னையில் மனவளர்ச்சி குன்றிய 1ஆம் வகுப்பு மாணவிக்கு சூடு வைத்து கொடுமைப்படுத்தியதாக பள்ளி நிர்வாகம் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

மனவளர்ச்சி குன்றிய 1ஆம் வகுப்பு சிருமிக்கு சூடு வைத்து கொடுமைப்படுத்தியதாக பள்ளி நிர்வாகம் மீது போலீசார் வழக்குப்பதிவு
மனவளர்ச்சி குன்றிய 1ஆம் வகுப்பு சிருமிக்கு சூடு வைத்து கொடுமைப்படுத்தியதாக பள்ளி நிர்வாகம் மீது போலீசார் வழக்குப்பதிவு

By

Published : May 19, 2022, 2:26 PM IST

சென்னை:வியாசர்பாடியை சேர்ந்தவர் திவ்யா(27),இவரது கணவர் இறந்துவிட்டார். திவ்யா அழகு நிலையம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். திவ்யாவிற்கு 6 வயதில் சற்று மனவளர்ச்சி குன்றிய மகள் உள்ளார்.

அச்சிறுமி பெரம்பூர் பாரதி சாலையில் உள்ள கல்கி ரங்கநாதன் மான்போர்ட் ஸ்பெஷல் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறார்.இந்நிலையில் நேற்று முன்தினம் திவ்யாவின் தந்தை கலைசெல்வன் சிறுமியை பள்ளியில் விட்டு, பின்னர் மதியம் சிறுமியை அழைக்க சென்றார்.

அப்போது பள்ளி ஆசிரியர் ஒருவர் சிறுமிக்கு கை,கால்களில் காயம் இருக்கிறது, ஏன் பள்ளிக்கு அனுப்புகிறீர்கள் என கலைசெல்வனிடம் கூறியுள்ளார். இதனை கண்ட கலைசெல்வன் காலையில் குழந்தை பள்ளிக்கு வரும் போது நல்லபடியாக வந்ததாகவும், பள்ளியில் தான் காயம் ஏற்பட்டுள்ளது எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இது குறித்து சிறுமியின் தாய் திவ்யாவிற்கு அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த திவ்யா பள்ளி ஆசிரியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இது குறித்த உரிய விளக்கத்தை தராததால் திவ்யா ஆத்திரத்தில் தலையில் மோதி பள்ளி ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து சென்றார்.

பின்னர் செம்பியம் காவல் நிலையத்தில் திவ்யா அளித்த புகாரின் பேரில் போலீசார் பள்ளிக்கு நேரடியாக சென்று விசாரணை நடத்தினர். மேலும் பள்ளியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து பள்ளி நிர்வாகம் மீது சிறார் நீதி சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தனது மகள் கை,கால்களில் சூடு வைத்து கொடுமைப்படுத்திவிட்டு, எந்த பதிலும் கூறாமல் பள்ளி நிர்வாகம் அலட்சியமாக இருப்பதாக திவ்யா குற்றம்சாட்டியுள்ளார். பாதுகாப்பாக இருப்பார்கள் என்று நம்பி குழந்தையை பள்ளிக்கு அனுப்புகிறோம், ஆனால் அங்கேயே பாதுகாப்பில்லை என அவர் தெரிவித்தார். மேலும் அவர் சூடு வைத்து கொடுமைப்படுத்தியதால் குழந்தை யாரை கண்டாலும் அஞ்சுவதாகவும் குறிப்பிட்டார்.

இதையும் படிங்க:WATCH: பெங்களூருவில் பள்ளி மாணவிகள் சண்டை!

ABOUT THE AUTHOR

...view details