தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நட்சத்திர ஹோட்டலில் விபச்சாரம் - புரோக்கர்கள் இருவர் கைது - சென்னையில் நட்சத்திர ஹோட்டலில் விபச்சாரம்

சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் வெளி நாட்டு பெண்களை வைத்து விபச்சார தொழிலில் ஈடுபடுத்திய இருவரை விபச்சார தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.

பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்த புரோக்கர்கள் இருவரை காவல்துரையினர் கைது செய்தனர்
பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்த புரோக்கர்கள் இருவரை காவல்துரையினர் கைது செய்தனர்

By

Published : May 14, 2022, 10:16 AM IST

Updated : May 14, 2022, 10:39 AM IST

சென்னை:சென்னையில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டலில் விபச்சாரம் நடைபெறுவதாக விபச்சார தடுப்புப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில் நட்சத்திர ஹோட்டலில் நடத்திய விசாரணையில் வெளிநாட்டு பெண்களை வைத்து விபச்சாரம் நடத்தியது தெரியவந்தது.

இதனையடுத்து பாலியல் தொழிலுக்கு ஈடுபடுத்திய வெளிநாட்டு பெண்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், வடமாநில நபர்கள் சிலர் நல்ல சம்பளத்தில் சென்னையில் வேலை வாங்கி தருவதாக கூறி விமான டிக்கெட் புக் செய்து சென்னைக்கு அழைத்து வந்ததாகவும், பின்னர் பிரபலமான நட்சத்திர ஹோட்டலில் தங்க வைத்து மிரட்டி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாகவும் தெரிவித்தனர்.

இதனையடுத்து போலீசார் அந்த வடமாநில நபர்களின் செல்போன் எண்ணை வைத்து டிராக் செய்ததில் ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து தனிப்படை போலீசார் விரைந்து சென்னையில் விபச்சார தொழில் நடத்தி வந்த இரு புரோக்கர்களை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் விபச்சார புரோக்கர்களான ஜோதி ரஞ்சன் ஜனா என்கிற ராகுல்( 30) மற்றும் கிருஷ்ணா சந்திரா ஸ்வைன்(27) என்பது தெரியவந்தது.

இவர்கள் பல வருடங்களாக உட்கார்ந்த இடத்திலேயே ஆன்லைன் மூலமாக பல மாநிலங்களில் விபச்சார தொழில் நடத்தி வந்தது தெரியவந்தது. குறிப்பாக சமூக வலைதளங்களில் வாடிக்கையாளர்கள் கேட்கும் மாநிலத்திற்கு பெண்களை அனுப்பி வருவதும், பெரும்பாலும் வெளிநாட்டு பெண்களை வேலை வாங்கி தருவதாக ஆசைவார்த்தை கூறி விமானம் மூலமாக வரவழைத்து நட்சத்திர ஹோட்டலில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்தது போலீஸ் தெரியவந்தது.

குறிப்பாக சென்னையில் தி நகர், நுங்கம்பாக்கம், கிண்டி, அண்ணாநகர், தேனாம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் நட்சத்திர ஹோட்டல் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் முன்பதிவு செய்து வெளிநாட்டு பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தி வந்தது தெரியவந்தது.

கடந்த 5 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்த இரு புரோக்கர்கள் மீதும் 14 வழக்குகள் நிலுவையில் இருப்பதும், ரோகன் ராகுல், சாம், மனோஜ், ராஜ் என பல பெயர்களை மாற்றி இருவரும் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது. கைது செய்யப்பட்ட இருவரையும் போலீசார் புவனேஷ்வர் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி டிரான்சிட் வாரண்டு பெற்று சென்னைக்கு அழைத்து வரக்கூடிய பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படிங்க:பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்ட சிறுமி - நிதி உதவி வழங்கிய தர்மபுரி எம்.பி.!

Last Updated : May 14, 2022, 10:39 AM IST

ABOUT THE AUTHOR

...view details