சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று (செப். 28) காலை வந்த தொலைபேசி அழைப்பு ஒன்றில் ஆழ்வார்பேட்டையில் உள்ள நடிகர் சூர்யாவின் அலுவலகத்தில் வெடிகுண்டு வைத்துள்ளதாகவும், அது சற்று நேரத்தில் வெடித்து சிதறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் பதறிபோன காவல் துறையினர், உடனடியாக மேற்கொண்ட விசாரணையில் மிரட்டல் விடுத்த நபர் விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தைச் சேர்ந்த புவனேஷ் (20) என்பது தெரியவந்தது.
நடிகர் சூர்யாவின் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது! - Actor Suriya
விழுப்புரம்: நடிகர் சூர்யாவின் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை காவல் துறையினர் கைதுசெய்துள்ளனர்.
விழுப்புரம்
இதையடுத்து அவரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர். விசாரணையில் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும், ஏற்கனவே முதலமைச்சர் பழனிசாமி, நடிகர் ரஜினி உள்பட பலரது வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளதும் தெரியவந்துள்ளது.
இதற்கிடையில் சூர்யாவின் அலுவலகத்தில் வெடிகுண்டு சோதனை நடத்தியதில் புரளி என்பதும் தெரியவந்துள்ளது.