சென்னை போரூரை அடுத்த ராமாபுரத்தைச் சேர்ந்த அன்புராஜ் என்பவர் காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்புகொண்டு பலத்த காவல் பாதுகாப்பு இருக்கும் இடத்தில் குண்டு வைக்கப்போவதாக மிரட்டல் விடுத்துள்ளார். இதைனையடுத்து, செல்போன் எண்ணை வைத்து காவல் துறையினர் அவரை கைது செய்துள்ளனர்.
வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது - சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு
சென்னை: காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை காவல் துறையினர் கைது செய்தனர்.
வெடிகுண்டு மிரட்டல்
முதற்கட்ட விசாரணையில் அவர் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை சேர்ந்தவர் என்பதும், அவருக்கு ஏற்பட்ட சொத்து பிரச்னையின் போது காவல் துறையினர் ஆதரவாக செயல்படவில்லை என்ற விரக்தியில் இவ்வாறு மிரட்டல் விடுத்ததாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.