தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நெல்லையில் அரசுப் பள்ளி மாணவனுக்கு கத்திக்குத்து; சக மாணவன் கைது - காவல்துறையினர் விசாரணை

நெல்லை மாவட்டம், களக்காடு அரசுப்பள்ளியில் சக மாணவனை கத்தியால் குத்திய மாணவனை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

நெல்லையில் அரசு பள்ளி  மாணவனுக்கு கத்தி குத்து
நெல்லையில் அரசு பள்ளி மாணவனுக்கு கத்தி குத்து

By

Published : Dec 6, 2022, 10:11 PM IST

திருநெல்வேலி: களக்காடு அரசு மேல்நிலைப்பள்ளியில் களக்காடு அருகே உள்ள புளியங்குளத்தைச் சேர்ந்த மாணவன் 12ஆம் வகுப்பு பயின்று வருகிறார். இவருடன் களக்காடு பகுதியைச் சேர்ந்த மாணவனும் பயின்று வருகிறார். இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்படும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று பள்ளியில் முன்பு உள்ள குடிநீர் குடிக்கும் இடத்தில், இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஒரு மாணவன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சக மாணவனின் முதுகில் குத்தினார். இதில் புளியங்குளத்தைச் சேர்ந்த மாணவன் அந்த இடத்திலேயே மயங்கி விழுந்தார்.

உடனே அருகில் உள்ள மாணவர்கள் ரத்தக் காயத்தோடு மாணவன் மயங்கி விழுந்ததைப் பார்த்து ஆசிரியரிடம் கூறியுள்ளனர். உடனே ஆசிரியர்கள் களக்காடு காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்தனர். பின்னர் மயங்கி விழுந்த மாணவனை மீட்டு களக்காடு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு மருத்துவர்கள் மாணவனுக்கு முதலுதவி சிகிச்சை அளித்துவிட்டு, மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து களக்காடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நாங்குநேரி துணை கண்காணிப்பாளர் சதுர்வேதி சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டார்.

நெல்லையில் அரசு பள்ளி மாணவனுக்கு கத்தி குத்து

கத்தியால் குத்திய சக மாணவனை கைது செய்த காவல் துறையினர், கத்தியால் குத்தியதன் காரணம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:மாடுகளை திருட வந்த கேரள இளைஞர் - தர்ம அடி கொடுத்து போலீசிடம் ஒப்படைத்த மக்கள்

ABOUT THE AUTHOR

...view details