தமிழ்நாடு

tamil nadu

பிணையில் தலைமறைவான 2,164 பேர் கைது!

By

Published : Feb 7, 2021, 10:04 PM IST

2020ஆம் ஆண்டு ஜனவரி முதல் இன்று வரை நீதிமன்றம் மூலம் பிணையில் வெளியில் வந்து தலைமறைவான கிட்டத்தட்ட 2,614 குற்றவாளிகளை உரிய பிடியாணைகளின் உத்தரவுப்படி கைது செய்யப்பட்டுள்ளனர் என காவல்துறை தெரிவித்துள்ளது.

Police have arrested 2164 fugitive criminals on bail
பிணை பெற்று தலைமறைவான குற்றவாளிகள் 2,164 பேர் கைது என காவல்துறை தகவல்!ஒ

சென்னை:2020ஆம் ஆண்டு ஜனவரி முதல் இன்று வரை நீதிமன்றம் மூலம் பிணையில் வெளியில் வந்து தலைமறைவான கிட்டத்தட்ட 2,614 குற்றவாளிகளை உரிய பிடியாணைகளின் உத்தரவுப்படி கைது செய்யப்பட்டுள்ளனர் எனக் காவல்துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "2020ஆம் ஆண்டு ஜனவரி முதல் இதுநாள் வரை சட்டம் மற்றும் ஒழுங்கினைப் பாதுகாக்கவும், ரவுடிகள் மற்றும் பொதுமக்களின் அமைதியை கெடுத்து குற்றங்கள் புரிந்து வரும் வழக்கமான குற்றவாளிகளை குற்றவியல் சட்டங்கள் மூலம் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

குற்ற வழக்குகளில் நீதிமன்றம் மூலம் பிணையில் வெளியில் வந்து தலைமறைவான குற்றவாளிகளை பிடிக்க நீதிமன்றங்களால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணைகளின் அடிப்படையில் தனிப்படை அமைத்து இதுவரை 2,614 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்றங்களில் முன்னிலைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

மேலும், 3 ஆயிரத்து 705 குற்றவாளிகள் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். நன்னடத்தை பிணை பத்திரம் உறுதிமொழியை மீறிய 120 குற்றவாளிகளை் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதுமட்டுமில்லாமல் 571 குற்றவாளிகள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்" எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க:இளவரசி, சுதாகரன் ஆகியோரின் 6 சொத்துக்கள் அரசுடைமை!

ABOUT THE AUTHOR

...view details