தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ராஜசேகர் உடல் தாயாரிடம் ஒப்படைப்பு: பிரேத பரிசோதனை வீடியோ முழுமையாக இல்லை எனப் புகார் - விசாரணை கைதி ராஜசேகர் வழக்கு

விசாரணை கைதி ராஜசேகர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நிலையில் அவரது உடல் நான்கு நாட்களுக்குப் பிறகு அவரின் தாயாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

ராஜசேகர்
ராஜசேகர்

By

Published : Jun 17, 2022, 8:43 PM IST

சென்னை:கொடுங்கையூர் காவல் நிலையத்தில் விசாரணைக் கைதி ராஜசேகர் கடந்த 12ஆம் தேதி சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்தார். இந்த உயிரிழப்பு பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் கொடுங்கையூர் காவல் ஆய்வாளர் ஜார்ஜ் மில்லர், பொன்ராஜ் உள்பட 5 காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிடப்பட்டது.

மேலும் ராஜசேகரின் பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் பிரேத பரிசோதனை வீடியோ வழங்கினால் மட்டுமே ராஜசேகரின் உடலை பெற்றுக்கொள்வோம் என அவரது தாயார் தெரிவித்திருந்தார்.

இதனைத்தொடர்ந்து ராஜசேகரின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானது. காவல் துறை தாக்கியதால் ராஜசேகர் உயிரிழக்கவில்லை என கூடுதல் ஆணையர் அன்பு தெரிவித்தார். மேலும் ராஜசேகரின் பிரேத பரிசோதனை வீடியோ ராஜசேகரின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த நிலையில் நான்கு நாட்களாக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த ராஜசேகரின் உடல் இன்று (ஜூன் 17) அவரது தாயார் உஷா ராணி மற்றும் குடும்பத்தினர், காவல் சித்ரவதைக்கு எதிரான கூட்டமைப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஆசீர் ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

அப்போது, இறப்பு சான்றிதழில் பட்டியலினத்தோர் பிரிவுக்கு பதிலாக வேறு பிரிவு குறிப்பிட்டு இருப்பதாக காவல் துறையிடம் ராஜசேகரின் தாயார் தெரிவித்தார். இதனையடுத்து மாஜிஸ்ட்ரேட் லட்சுமி பட்டியலினத்தோர் பிரிவு என மாற்றி தருவதாக கூறியதையடுத்து, உடலை குடும்பத்தினர் பெற்றுக்கொண்டனர். அதன்பிறகு, ராஜசேகரின் உடல் சொந்த ஊரான திருவள்ளூர் மாவட்டம், அலமாதி பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது.

ராஜசேகர் உடல் தாயாரிடம் ஒப்படைப்பு

ராஜசேகரின் பிரேத பரிசோதனை வீடியோ முழுமையாக இல்லை எனவும்; இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத்தொடர இருப்பதாகவும் காவல் சித்ரவதைக்கு எதிரான கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஆசீர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: 'ராஜசேகர் மரணத்திற்கும் காவல்துறைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை' - கூடுதல் ஆணையர் அன்பு

ABOUT THE AUTHOR

...view details