சென்னை :மண்ணடியைச் சேர்ந்த பிரபு (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) அவரது மனைவியும் முத்தியால்பேட்டை அருகே கடை வைத்துள்ளனர்.
அப்போது, அக்கடைக்கு வந்த பிரபுவின் மனைவியுடன் திருமணமான காவலரான பெஞ்சமின் பிராங்க்ளினுடன் பழக்கம் ஏற்பட்டு நட்பாகப் பழகி வந்துள்ளனர். நாளடைவில் இவர்கள் நட்பு, திருமணத்தைத் தாண்டிய காதலாக மாறியுள்ளது. அப்போது இருவரும் நெருக்கமாக புகைப்படம் எடுத்துள்ளனர்.
இந்நிலையில் பிரபுவின் மனைவியிடம் நெருக்கமாக இருந்தபோது எடுத்த புகைப்படங்களை வைத்து, அவரை காவலரான பெஞ்சமின் பிராங்க்ளின் மிரட்டி வந்துள்ளார். இதனால் அப்பெண் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
கணவருக்குத் தெரியவந்த திருமணத்தை மீறிய உறவு
அப்போது, அவரை மீட்டு பிரபு தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். பின்னர் மனைவியின் செல்போனில் காவலரான பெஞ்சமின் பிராங்க்ளின் உடன் நெருக்கமாக இருந்த புகைப்படத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பிரபு, புகைப்படம் குறித்து கேட்கும் போது பெஞ்சமின் பிராங்க்ளின் அந்த புகைப்படத்தைக் காட்டி தன்னை மிரட்டி வருவதைத் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, தனது மனைவியுடன் எடுத்த ஆபாச புகைப்படத்தை காவலர் பெஞ்சமின் சமூக வலைதளங்களில் பதிவிடப்போவதாகவும், இல்லையென்றால் 10 லட்சம் ரூபாய் தர வேண்டும் என மிரட்டுவதாகவும் பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் ஜெயபிரகாஷ் காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்த ஜூலை 17ஆம் தேதி புகாரளித்துள்ளார்.
புகாரைத் தொடர்ந்து பணியிடை நீக்கம்
இந்தப் புகார் தொடர்பாக காவலர் பெஞ்சமின் பிராங்க்ளின் மீது துறைரீதியான விசாரணை நடத்தப்பட்டது. இந்த நிலையில் எண்ணூர் காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றி வந்த பெஞ்சமின் பிராங்க்ளினை பணியிடை நீக்கம் செய்து மாதவரம் துணை ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதையும் படிங்க: போலி ஆவணங்கள் மூலம் பல கோடி ரூபாய் மோசடி செய்த நபர் கைது