தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பைக்கில் 4 பேர் பயணம்: சோசியல் மீடியா புகாருக்கு உடனே ரெஸ்பான்ஸ் செய்தபோலீஸ் - Police

சென்னையில் இருசக்கர வாகனத்தில் 4 பேர் அமர்ந்து தாறுமாறாக ஓட்டிய நபர்கள் குறித்து சமூக வலைதளம் மூலம் புகார் அளித்ததில் நள்ளிரவிலும் அபராதம் விதித்து சென்னை காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

பைக்கில் 4 பேர் அமர்ந்து தாறுமாறான பயணம்: காத்திருந்த அதிர்ச்சி!
பைக்கில் 4 பேர் அமர்ந்து தாறுமாறான பயணம்: காத்திருந்த அதிர்ச்சி!

By

Published : Dec 15, 2022, 8:41 PM IST

Updated : Dec 15, 2022, 8:51 PM IST

சென்னை: போக்குவரத்து விதிமுறைகள் குறித்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுடன் சென்னை காவல் துறை சமூக வலைதளப் பக்கத்தை இணைத்து புகார் அளித்தால் உடனுக்குடன் விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அதன் ஒரு தொடர்ச்சியாக நேற்று (டிச.14) இரவு முகப்பேர் பகுதியில் 4 பேர் ஒரு இருசக்கர வாகனத்தில் அமர்ந்து கொண்டு தாறுமாறாக வாகனத்தை ஓட்டியுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட வாகன ஓட்டி ஒருவர் புகைப்படம் எடுத்து சென்னை காவல்துறை சமூக வலைதளப் பக்கத்தை இணைத்துப் புகார் ஒன்றை அளித்தார்.

இரவு நேரத்தில் அளிக்கப்பட்ட புகார் என்றாலும் உடனடியாக சம்பந்தப்பட்ட திருமங்கலம் போக்குவரத்து காவலரை அணுகி விசாரணை மேற்கொண்டு, சென்னை போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும் ரூ.3000 அபராதம் விதித்து அதற்குரிய சலானை புகார் அளித்தவர் சமூக வலைதளப் பக்கத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து நள்ளிரவு 12 மணிக்கு சென்னை காவல்துறை பதிலளித்துள்ளது.

தாறுமாறாக பைக் ஓட்டிய நபருக்கு ரூ.3ஆயிரம் அபராதம் விதித்த சென்னை காவல்துறை

புகார் அளித்த 2 மணி நேரத்தில் அதுவும் நள்ளிரவிலும் நடவடிக்கை மேற்கொண்ட காவல்துறைக்கு பொதுமக்கள் சமூக வலைதளத்தில் பாராட்டு தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க:முதலமைச்சர் தங்க கோப்பை போட்டி நடத்த நிதி: உதயநிதி ஸ்டாலின்

Last Updated : Dec 15, 2022, 8:51 PM IST

ABOUT THE AUTHOR

...view details