தமிழ்நாடு முழுவதும் கரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இதன் காரணமாக அனைத்து வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டுள்ளன. இதனால் ரம்ஜான் பண்டிகையை அனைவரும் வீட்டிலேயே கொண்டாடும் படி அரசு கேட்டுக்கொண்டது.
ஊரடங்கை மீறி ரம்ஜான் சிறப்பு தொழுகை: போலீஸார் வழக்கு பதிவு! - ரம்ஜான் சிறப்பு தொழுகை
சென்னை: ஊரடங்கு உத்தரவை மீறி ரம்ஜான் பண்டிகையின் போது தொழுகையில் ஈடுபட்ட மசூதி நிர்வாகி உள்பட 125 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

FIR
இந்த நிலையில், ஊரடங்கு உத்தரவை மீறி ராயப்பேட்டை, மந்தைவெளி பாக்கம் பகுதியில் உள்ள மசூதிகளில் இஸ்லாமியர்கள் தொழுகையில் ஈடுபட்டதாக புகார் வந்தது. இந்த புகாரையடுத்து பட்டினம்பாக்கம், ஐஸ் ஹவுஸ் காவல்துறையினர், மசூதி நிர்வாகி அப்துல் லத்தீப், செயலாளர் ஜரூக் அலி உள்ளிட்ட 125 பேர் மீது அரசு உத்தரவை மீறுதல், சட்டவிரோத கூடுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.