தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பட்டாக் கத்தி சம்பவம்: கல்லூரி மாணவர்களுடன் காவல்துறையினர் கலந்துரையாடல்! - காவல்துறையினர்

சென்னை: அரும்பாக்கத்தில் அரசு பேருந்தில் கல்லூரி மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டதையடுத்து, மாணவர்கள், கல்லூரி நிர்வாகத்துடன் காவல்துறையினர் கலந்துரையாடினர்.

கல்லூரி மாணவர்களுடன் காவல்துறையினர் கலந்துரையாடல்

By

Published : Jul 24, 2019, 5:01 PM IST

சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் கல்லூரி மாணவர்கள் 'பேருந்து தினம்' என்ற பெயரில் பல்வேறு வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் பேருந்தில் செல்லும் போது, ரூட் தல பிரச்னையில் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டதில் ஏழு மாணவர்கள் படுகாயமடைந்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

இதைத்தொடர்ந்து சென்னையில் பயிலும் கல்லூரி மாணவர்கள், காவல்துறையினர் இடையே நல்லுறவை ஏற்படுத்தும் வகையில் மாநிலக் கல்லூரி, பச்சையப்பன் கல்லூரி, புதுக்கல்லூரி, நந்தனம் கலைக் கல்லூரி உள்ளிட்ட கல்லூரி மாணவர்கள், நிர்வாகத்தினரிடம் கலந்துரையாடினர்.

கல்லூரி மாணவர்களுடன் காவல்துறையினர் கலந்துரையாடல்
இதுகுறித்து காவல்துறை துணை ஆணையர் சுகுனா சிங் கூறுகையில், இந்த கலந்துரையாடல் மூலம் மாணவர்களிடையே ஏற்படும் மோதல்கள் குறித்த தகவல்கள் இருப்பின் உடனடியாக மாணவர்கள் அதை காவல்துறைக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றும், பேருந்தில் ஏற்படக்கூடிய பிரச்னைகள் தொடர்பாக பேருந்து ஓட்டுநர்களும், உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details