நாடு முழுவதும் இன்று தந்தையர் தினம் கொண்டாடப்படவுள்ளதால், அதன்மூலம் கரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியில் சென்னை காவல் துறை இறங்கியுள்ளது. சென்னை பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு காவல் துறையும் கோடாக் மகிந்திரா வங்கியும் இணைந்து பள்ளிக் குழந்தைகளுக்கு 'அன்புள்ள அப்பா’ என்ற தலைப்பில் கடிதம் எழுதும் போட்டியை நடத்துகின்றனர். 5ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் இந்தப் போட்டியில் பங்குபெறலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
இப்போட்டியில் பங்குபெறும் மாணவர்கள் தங்களது தந்தையைப் பாதுகாப்புடன் இருக்க வலியுறுத்த வேண்டும் எனத் தெரிவித்த காவல் துறை, கரோனா நோய் பரவாமல் இருக்க தங்களது தந்தை பின்பற்ற வேண்டிய வழிமுறைகளைக் கடிதமாக எழுதி அதனை https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdC1uLF37AvoXRiqh0oRr_cYTDmPBTtJszXXBj6mS52uALArQ/viewform என்ற லிங்க் மூலம் காவல் துறைக்குப் பகிர வேண்டும் என்றும், அதில் சிறந்த கடிதம் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.