இந்தியாவின் 74ஆவது சுதந்திர தின விழா வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. வழக்கமாக, சுதந்திர தின விழாக்களின் போது, தேசியக் கொடி அச்சிட்ட தோரணங்கள் உள்ளிட்டவை பரவலாகப் பயன்படுத்தப்படும். தற்போது கரோனா அச்சுறுத்தல் காரணமாக, பொதுமக்கள் முகக்கவசத்தை அதிகம் பயன்படுத்தி வருவதால், அதையும் சில இடங்களில் வியாபார நோக்கில் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.
இதன் விளைவாக, முகக்கவசங்களில் தேசியக் கொடியை அச்சடித்து பல்வேறு இடங்களில் பொதுமக்களுக்கு விற்பனை செய்து வருகின்றனர். பொதுமக்கள் முகக்கவசத்தை பயன்படுத்தி விட்டு குப்பைகளிலும், சாலைகளிலும் தூக்கி எறியும் சூழலில், இந்த விற்பனை தேசியக் கொடியை அவமதிக்கும் செயலில் முடிய வாய்ப்புகள் அதிகம்.