சென்னை: மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கடந்த அக்டோபர் 14ஆம் தேதி பணியில் இருந்தபோது நெஞ்சுவலி காரணமாக, தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் ஆயிரம் விளக்கு அப்போலோ மருத்துவமனையில் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார்.
சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் இன்று டிஸ்சார்ஜ் இந்தநிலையில் அவரது உடல் நிலை சீராக உள்ளது என்றும்; விரைவில் அவர் தனது அன்றாட பணிக்குத் திரும்புவார் எனவும் அப்போலோ மருத்துவக் குழு தெரிவித்துள்ளது.
இதையடுத்து இன்று (அக்.17) சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் டிஸ்சார்ஜ் செய்யப்படவுள்ளார்.
இதையும் படிங்க: சங்கர் ஜிவால் பணிகளைக் கவனிக்கும் சைலேந்திரபாபு