சென்னையில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடத்தக்கூடிய போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், மனிதச் சங்கிலி, உண்ணாவிரதம், பொதுக்கூட்டம் உள்ளிட்டவைகளை நடத்த அரசியல் கட்சிகள், அமைப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த தடை உத்தரவு அடுத்த 15 நாள்கள் அமலில் இருக்கும். இதனை காவல் ஆணையர் ஏ.கே. விசுவநாதன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு நகர காவல் சட்டம் 1888பிரிவு 41(2) அதிகாரங்களை கொண்டு இன்று இரவு முதல் மார்ச் 14 ஆம் தேதி இரவு வரை போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் உள்ளிட்டவைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.