தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காவலர் வீர வணக்க நாள் - உயிர் நீத்த 377 காவலர்களுக்கு மரியாதை - தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர்

காவலர் வீர வணக்க நாள் நாடு முழுவதும் இன்று கடைபிடிக்கப்படுகிறது . அதையொட்டி சென்னை டிஜிபி அலுவலகத்தில் வெவ்வேறு சம்பவங்களில் உயிர் நீத்த 377 காவலர்களுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.

காவலர் வீர வணக்க நாள்
காவலர் வீர வணக்க நாள்

By

Published : Oct 21, 2021, 2:30 PM IST

சென்னை: காவலர் வீர வணக்க நாள் ஆண்டுதோறும் அக்டோபர் 21 ஆம் தேதி நாடு முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது.

இந்நாளில், பணியில் இருக்கும்போது உயிர் நீத்த காவலர்களுக்கு மரியாதை செலுத்தப்படும். அதையொட்டி இன்று சென்னை டிஜிபி அலுவலகத்தில், இந்தியாவில் வெவ்வேறு சம்பவங்களில் கடந்த ஒரு வருடத்தில் உயிர் நீத்த 377 காவலர்களுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.

காவலர் வீர வணக்க நாள்

1959 ஆம் ஆண்டு ஆக்டோபர் 21 ஆம் தேதி லடாக் பகுதியில் கடல் மட்டத்தில் இருந்து 11 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள ஹாட் ஸ்பிரிங்ஸ் என்னும் இடத்தில் சீன ராணுவத்தினர் ஒளிந்து இருந்து மேற்கொண்ட திடீர் தாக்குதலில் 10 மத்திய பாதுகாப்பு படை காவலர்கள் உயிரிழந்தனர்.

இந்த நிகழ்வை நினைவு கூறும் விதமாகவும், பணியின் போது உயிர் நீத்த காவலர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாகவும் ஆண்டுதோறும் காவலர் வீர வணக்க நாள் அனுசரிக்கப்படுகிறது .

தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திர பாபு, சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், காவல்துறை உயரலுவலர்கள், தென் பிராந்திய முப்படை அலுவலர்கள் ஆகியோர் உயிர் நீத்த காவலர்களின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினர்.

இதையும் படிங்க:20 நாள்களுக்கு பின் 10 நிமிடங்கள்: சிறையில் மகனை சந்தித்த ஷாருக் கான்!

ABOUT THE AUTHOR

...view details