சென்னை போரூர் அருகே மதனந்தபுரம் பகுதியில் போக்குவரத்து காவலர்கள் ரமேஷ், ஜேம்ஸ் ஆகியோர் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, அழுக்கான உடையில் சற்று மன நலம் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் சாலையை முறையாகக் கடப்பதும், போக்குவரத்தைச் சரி செய்வதுமாக இருந்துள்ளார். இதைப் பார்த்த போக்குவரத்து காவலர்கள், அவரிடம் விசாரித்த போது முறையான பதில் கூறவில்லை.
இதனையடுத்து அருகிலுள்ள முடிவெட்டும் கடைக்கு அந்த நபரை அழைத்துச் சென்று முகசவரம் செய்து, மொட்டையடித்து, அவரை குளிப்பாட்டி புது உடைகளும் உணவுகளும் வாங்கிக் கொடுத்தனர். பின்னர், அவரிடம் விசாரிக்கையில் தனது பெயர் சசி என்று மட்டும் கூறியுள்ளார்.