தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஜி20 மாநாடு; சென்னையில் 3 நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்கத் தடை - சென்னையில் ட்ரோன்கள் பறக்கத் தடை

சென்னையில் ஜி20 கல்வி செயற்குழு மாநாடு (Chennai G20 Education Working Group Conference) நடைபெறுவதையொட்டி, பாதுகாப்பு அம்சங்களுக்காக மூன்று நாட்களுக்கு டிரோன்கள் பறக்க சென்னை காவல்துறை தடை விதித்துள்ளது. மேலும், மாநாடு நடக்கும் இடங்கள், வழித்தடங்கள், தங்கும் இடங்களில் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Jan 30, 2023, 8:41 PM IST

சென்னை:இந்த ஆண்டுக்கான ஜி20 கல்வி செயற்குழு மாநாடு (Chennai G20 Education Working Group Conference) நாளை முதல் பிப்ரவரி 2ஆம் தேதி வரை சென்னை மற்றும் மகாபலிபுரத்தில் நடைபெற உள்ளது. இந்த ஜி20 மாநாட்டில் 29 வெளிநாடு பிரதிநிதிகள் மற்றும் 15 பன்னாட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்துகொள்ள உள்ளனர்.

இவர்கள் அனைவரும் சென்னையில் உள்ள தாஜ் கோரமண்டல், தாஜ் கன்னிமாரா, ஹயாத், தாஜ் கிளப் ஹவுஸ் ஆகிய இடங்களில் தங்குவதுடன், ஐஐடி ஆராய்ச்சி பூங்காவில் நடைபெறும் கருத்தரங்கத்தில் பங்கேற்க உள்ளனர். மேலும், 1ஆம் தேதி அன்று மகாபலிபுரத்தில் உள்ள UNESCO World Heritage Sites-ல் நடைபெறும் நிகழ்விலும் அனைத்து பிரதிநிதிகளும் கலந்துகொள்ள உள்ளனர்.

ட்ரோன்கள் பறக்கத் தடை: ஆகையால், நாளை முதல் 2ஆம் தேதி வரை சென்னை பெருநகர காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட தங்கும் இடங்கள், விழா நடைபெறும் இடங்கள் மற்றும் பிரமுகர்கள் பயணம் செய்யும் வழித்தடங்கள் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டு, அந்தப் பகுதிகள் மற்றும் வழித்தடங்களில் டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்படுவதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: புதுச்சேரியில் ஜி20 அறிவியல் மாநாடு தொடங்கியது

ABOUT THE AUTHOR

...view details