சென்னை எத்திராஜ் சாலையில் அமைந்துள்ள தனியார் ஓட்டல் பார்ட்டிகளில் போதைப் பொருட்கள் பயன்படுத்துவதாக போதைப் பொருள் தடுப்பு பிரிவு காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து,திடீரென்று ஓட்டலுக்குச் சென்று சோதனை மேற்கொண்ட போது அங்கே போதைப் பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
போதைப் பொருளுக்கு அடிமையாகும் இளம் தலைமுறை - chennai
சென்னை: 1.5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருள் வைத்திருந்த இரண்டு இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
![போதைப் பொருளுக்கு அடிமையாகும் இளம் தலைமுறை](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-4235212-thumbnail-3x2-drug.jpg)
கைது
இதனையடுத்து, ராஜா ஆனந்த் (27), ஹரிகரன் (28) ஆகிய இருவரையும் போதைப் பொருள் தடுப்பு பிரிவு காவல் துறையினர் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூபாய் 1.50 லட்சம் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்தனர். மேலும், இவர்களிடம் போதைப் பொருள் விற்றது யார் என விசாரித்து வருகின்றனர்.