சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்த அரசு ஓய்வு பெற்ற ஊழியர் குப்பானந்தம், கடந்த 1ஆம் தேதி வங்கியிலிருந்து 13 ஆயிரம் ரூபாய் எடுத்துக் கொண்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.
காவல்துறை அலுவலர் போல் நடித்து பணம், நகை பறித்தவர் கைது
சென்னை: காவல்துறை அலுவலர் போன்று நடித்து பணம், நகை பறித்தவரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.
அப்போது அவ்வழியாக ஆட்டோவில் வந்த ஒருவர், குப்பானந்தமிடம் தன்னை குற்றப்பிரிவு காவலர் என அறிமுகப்படுத்திவிட்டு, வலுக்கட்டாயமாக அவரை ஆட்டோவில் ஏற்றியுள்ளார். பின்னர் குப்பானந்தத்திற்கு திருட்டு வழக்கு ஒன்றில் தொடர்பிருப்பதாகக் கூறி, அவரிடமிருந்த ரூபாய் நோட்டு எண்களை சரிபார்க்க வேண்டுமெனத் தெரிவித்து, பணம், நகைகளைப் பறித்துக் கொண்டு வள்ளுவர் கோட்டம் அருகே இறக்கி விட்டுச் சென்றுள்ளார்.
இதனையடுத்து, வெகு நேரமாகியும் ஆட்டோவில் சென்றவர் திரும்பி வராததால், சந்தேகமடைந்த குப்பானந்தம் காவல்துறையினரிடம் புகார் செய்தார். அதன்பேரில், சம்பவ இடத்திலிருந்த சிசிடிவி காணொலி காட்சிகளைச் சோதனையிட்ட காவல்துறையினர், ஆட்டோ பதிவு எண்ணை வைத்து, திருநின்றவூரைச் சேர்ந்த மகேந்திரன் என்பவரை கைது செய்தனர்.